கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய மதுபான கொள்கை...

"அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், இது மோடி அரசின் பழி வாங்கும் நடவடிக்கை தான்" என்ற நீங்கள் கருதுகிறீர்களா? இதைப் படித்த பின் சொல்லுங்கள்

*தில்லி அரசின் பழைய மதுபான கொள்கை* 👇🏾

- ஒரு பாட்டில் (750 ml ) மொத்த வியாபாரியின் விற்பனை விலை ₹166.73
- எக்சைஸ் டியூட்டி ₹223.88
- மதிப்பு கூட்டு வரி ₹106.00
- சில்லறை விற்பனையாளர் கமிஷன் ₹33.39
- கஸ்டமருக்கு விற்கும் விலை ₹530.00


*கெஜ்ரிவால் அரசு கொண்டுவந்த புதிய மதுபான கொள்கை*👇🏾

- ஒரு பாட்டில் (750 ml ) மொத்த வியாபாரியின் விற்பனை விலை ₹188.41
- எக்சைஸ் டியூட்டி ₹1.88
- மதிப்பு கூட்டு வரி ₹1.90
- சில்லறை விற்பனையாளர் கமிஷன் ₹363.27
- கஸ்டமருக்கு விற்கும் விலை  ₹560.00

அதாவது *பழைய மதுபான கொள்கையின்படி, டில்லி அரசுக்கு ஒரு பாட்டில் விற்பனையில் ₹329.57 வருமானமாக கிடைத்தது. புதிய மதுபானக் கொள்கையின்படி வெறும் ₹8.32 தான் வருமானமாக வந்தது. இதனால் அரசுக்கு ஒரு பாட்டிலில் ₹321.56 வருமான இழப்பு ஏற்பட்டது.*

பழைய கொள்கையின்படி சில்லறை விற்பனையாளரின் கமிஷன், வெறும் *₹33.39*. ஆனால் புதிய கொள்கையின்படி சில்லறை  விற்பனையாளருக்கு *₹363.27* கமிஷனாக கிடைத்தது. அதாவது 10 மடங்கு அதிக லாபம்.

*ஆனால் அரசுக்கோ மிகப்பெரிய வரி இழப்பு ஏற்படுகிறது*

     இந்த நன்மைகள் மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கிடைக்க, அந்த நிறுவனங்கள்
சில்லறை விற்பனை கடைகளை திறக்க அனுமதித்தார்கள் (*இது டெல்லி அரசு சட்டத்தின்படி தவறு*)

மதுபானம் விற்பனை அளவை அதிகரிக்க 
கேஜ்ரிவால் அரசு கொண்டுவந்த சில சட்ட மாற்றங்கள்👇

1) குடிப்பவர்களின் வயதை 18 ஆக குறைத்தார்கள்.

2) கடைகள் & பார்கள் திறந்திருக்கும் நேரத்தை விடிய காலை 3 மணியாக மாற்றினார்கள்.

3) சில குறிப்பிட்ட தினங்களில் மது விற்கக் கூடாது என்ற விதி இருந்தது. இதை ஆண்டுதோறும் 31 நாட்களில் இருந்து வெறும் 3 நாட்களாக குறைத்தார்கள்.

இந்த மாற்றங்களை செய்ததால் மதுபான விற்பனை உயர்ந்தது

இப்போ புரிகிறதா ஏன் CBI & ED இந்த கேசை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தது என்று?

      சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீகம் பற்றிய செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.

Comments

Popular posts from this blog

புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...

பிரச்சாரத்தை துவங்கிய பேராசிரியர்....மதுரை மக்கள் யார்பக்கம்?

கணவன்,மனைவி,மகன் விஷம் குடித்து தற்கொலை