புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...
பவி கிரியேஷன்ஸ் மற்றும் வேல் இன்போடைன்மென் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு பனிவிழும் இரவு என்று பெயரிடப்பட்டுள்ளது.
தனிமையில் சோஷியல் மீடியா தவறுதலான வழிகாட்டுதலால் ஏர்ப்படும் பிரச்சினை சொல்லும் திர்லர் கதையாக உருவாகிறது, S R ராஜேஷ் இயக்கத்தில் சதா முருகன், ஜெயக்குமார் மற்றும் செல்வகுமார் தயாரிக்கின்றனர்.
ஒருநொடி, ஜென்ம நட்சத்திரம் போன்ற படங்களில் இரண்டாவது கதாநாயகனாக நன்கு அறியப்பட்ட அருண் கார்த்தி இப்படத்தின் கதையின் நாயகனாக நடிக்கிறார், இன்விசுபள் உமன் என்ற ஹிந்தி தொடரின் மூலம் பிரபலமான இனாக்ஷி கங்குலி கதையின் நாயகியாகவும் இவர்களுடன் சேரன் ராஜ், சரவண சக்தி, உறியடி சுருளி, நந்தா, வினோத் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு ஜெயக்குமார்தங்கவேல், இசை சதா முருகன், படத்தொகுப்பு MS செல்வா ஆகியோர் இணைகின்றனர் , நவம்பர் 1 st கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட பட்டிருப்பதாகவும் புதிய படத்திற்கான பணியில் இருந்த போது, ஒளிப்பதிவாளர் ஜெயக்குமாரின் JayakumarThangavel கதை தற்போதைய சூழல் பற்றி தெளிவான திரில்லர் கதையாக முழுமை பெற்றிருந்ததால்,
என்னுடைய கதையை ஓரம் வைத்து விட்டு இந்த படத்தை இயக்கும் பணியில் இரங்கிவிட்டதாக தன் சுவாரஸ்யத்தை பகிர்ந்துகொண்டார் இயக்குனர் ராஜேஷ்.
Comments
Post a Comment