பிரச்சாரத்தை துவங்கிய பேராசிரியர்....மதுரை மக்கள் யார்பக்கம்?
மதுரையை பொறுத்தவரை முக்கிய கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து பந்தயதிர்க்கு தயாராகிவிட்டன. மதுரையை திமுக கூட்டணிக்கு ஒதுகியதால் கூட்டணி கட்சியின் சார்பின் சிட்டிங் MP சு வெங்கடேசன் போட்டியிடுகிறார், அதிமுக சார்பில் முன்னாள் திருப்பரங்குன்றம் MLA டாக்டர் சரவணனும், BJP சார்பில் பாஜக மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம ஶ்ரீநிவாசன் கலத்தில் உள்ளனர்.
கலத்தில் சரவணனை தவிர்த்து பேராசிரியருக்கும் தற்போதய எம்பி சு வெண்டதேசனுக்குமே எதிர்பார்ப்பு அதிகமா உள்ளதாக தெரிகிறது.
சென்ற முறை தொழில்சங்கங்கள் பலவும் வெங்கடேசனின் வாக்குறுதிகளை நம்பி அளித்த வாக்குகள் தற்போது கிடைக்கும் என்பது சந்தேகமே, எதிர்பார்த்தபடி மதுரை மக்களுக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதுமட்டுமின்றி சமீப காலமாக பத்திய பாஜக திட்டங்களை தான் போராடி பெற்றதுபோல் செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சனங்களுக்கு உள்ளானார்.
அதிர்ப்தியில் உள்ள மதுரை மக்கள் கவனம் பாஜக வேட்பாளர் பேராசிரியர் ராம ஶ்ரீநிவாசன் பக்கம் திரும்பி உள்ளது
நேற்று மார்ச் 27 முதல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இருந்து தான் பிரச்சாரத்தை துவங்கிய அவருக்கு மக்கள் பெருமளவு ஆதரவு அளித்து வருகிறார்கள், இதனை வாக்கு அரசியலுக்கு மாற்றிக்கொள்ளும் வகையில் மத்திய பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க இன்று மார்ச் 28 அன்று மதுரை பாராளுமன்ற தேர்தல் பணி குறித்து IT&SM மாநில தலைவர் MS பாலாஜி அவர்கள் மற்றும் மாநில செயலாளர் திரு. செந்தில், மதுரை வேட்பாளர் prof ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் ITwing பணி சம்பந்தமான குறிப்பு கூட்டம் நடந்தது.
இதில் மதுரை கிழக்கு மாவட்ட IT&SM மாவட்ட தலைவர் மகாமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்கள்
எதுவாயினும் மக்கள் தேர்வு எப்படி இருக்கும் என்பதை தேர்தல் முடிவு மட்டுமே தீர்மானிக்கும்
சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.
Comments
Post a Comment