இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை: புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம் இயக்கப்படுகிறது. புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு போக்குவரத்து கழகம் தரப்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இன்று முதல் 30 வரை சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 28ல் 505, மார்ச் 29ல் 300, மார்ச் 30ல் 345 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஒசூர் ஆகிய இடங்களுக்கு 3 நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. விழுப்புரம் கோட்டம் சார்பில் புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு சிறப்புப் பேருந்து இயக்கப்படுகிறது. மார்ச் 28ல் 240 பேருந்துகள், 29ல் 180 பேருந்துகள், 30ல் 240 என 660 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுகிறது.


தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது.




       சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.

Comments

Popular posts from this blog

புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...

பிரச்சாரத்தை துவங்கிய பேராசிரியர்....மதுரை மக்கள் யார்பக்கம்?

கணவன்,மனைவி,மகன் விஷம் குடித்து தற்கொலை