உதகையில் திமுக அராஜகம், அதிபயங்கரம் !!

     உதகையில் நேற்று பாஜக வேட்புமனு தாக்கல் செய்ய செல்லும் போது,  போலீஸாரின் தடியடியால் கடுமையாக தாக்கப்பட்ட கூடலூரை சேர்ந்த விஜயன் அவர்கள் இன்று இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்துள்ளதாக சொல்கிறார்கள். 

நேற்று உதகை கலக்டரேட் ஜங்ஷன் அருகே பாஜக சார்பாக வேட்புமணு தாக்கல் நிகழ்வை ஒட்டி, முருகன் அவர்கள் மற்றும் ஏராளமான பாஜகவினர் காத்திருந்தனர்.  பாஜகவிற்கு அடுத்து வேட்புமனு தாக்கல் செய்ய அதிமுகவினர் காத்திருந்தனர். இருகட்சி தொண்டர்களுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லாமல் சூழல் அமைதியாக இருந்துள்ளது.

      மற்றொருபுறம் திமுக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சிக்கு 500 ரூபாய் கொடுத்து ஆட்களை கூட்டி வந்து கூட்டமே இல்லாமல் வெறிச்சோடி இருந்தது. இதனால் ஆளும் தரப்பு பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்ந்துள்ளது. ஆ. ராசாவின் சரிந்துவரும் செல்வாக்கை ஜீரனிக்க இயலாமல் பெண்கள் பலரும் கூடியிருந்த பாஜக கூட்டத்தின் மீது, போலீஸாரின் தடியடி பிரயோகம் நடத்தப்பட்டது.

எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக போய் கொண்டிருந்த பாஜக கூட்டத்தில் வெறிகொண்டு போலிசார் தடியடி நடத்த பல பெண்கள் உட்பட கடுமையாக காயமடைந்துள்ளனர். காதில் ரத்தம் வர பாஜக பிரமுகர்கள் ஓடுவதும், காலில் ரத்த காயத்துடனும், உள்காயத்துடனும் பலர் பெரும் வேதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர்.

பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் தள்ளுமுள்ளு நடந்து சண்டை நடந்தது என்பது போல் சித்தரித்து, அதை அடக்க தடியடி நடத்தியதுபோல் ஒரு போலி நாடகத்தை எஸ்.பி. உத்தரவின் பேரில் நடந்தேறியதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் பாஜகவினர் சமயொஜிதமாக அதிமுகவினரிடம் நமக்குள் பிரச்சினை நடந்தது போல் சித்தரிக்க முயல்கிறார்கள் நாம் தனித்தனியாக விலகி இருப்போம் எனக் கேட்டுக் கொள்ள, அவர்கள் விலகி அமர்ந்துள்ளனர்.

தடியடியை எதிர்த்து கூக்குரல் எழுப்பிய பாஜகவினரை களைந்து
செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொள்ள, அண்ணாமலை வரும்வரை இதை விட மாட்டோம் என பாஜகவினர் அமர்ந்துள்ளார்கள். சம்பவம் கேட்டறிந்து விரைவாக வந்த அண்ணாமலை, இப்படி பாஜக மீது தடியடி நடத்தியதற்கு கடுமையான சட்ட விளைவுகளை சந்தீப்பீர்கள், இதற்கு எஸ்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என எச்சரித்து உள்ளார். ஒரு வழியாக எஸ்.பி. மன்னிப்பு கேட்ட பின் தான் கூட்டம் களைந்துள்ளது.


விஷாலினி எனும் பெண்மணி உட்பட காயமுற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சில பெண்கள் இரவுக்குள் வீட்டுக்கு திரும்பியாக வேண்டும் என உள் காயோத்தோடே கடும் வேதனையோடு
வீட்டிற்கு சென்றுள்ளனர்.


இந்நிலையில், நேற்று தடியடியில் காயமுற்று மன உளைச்சலோடு வீடு திரும்பிய பாஜக பூத் ஏஜென்ட் விஜயன் அவர்கள் இன்று அமரராகியுள்ளார். இந்த செய்தி வெளிவராத வகையில் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அவர் மாரடைப்பில் இறந்ததாக தகவல்கள் வெளிவருகின்றன என பலரும் அவருக்கு நியாயம் வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

   சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.

Comments

Popular posts from this blog

புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...

பிரச்சாரத்தை துவங்கிய பேராசிரியர்....மதுரை மக்கள் யார்பக்கம்?

கணவன்,மனைவி,மகன் விஷம் குடித்து தற்கொலை