ஈரோடு மதிமுக எம்.பி. கணேசமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

“ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்;

திமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய கணேசமூர்த்தி , ஒருங்கிணைந்த மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளைத் திறம்பட ஆற்றியவர்;

பின்னர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உடன் இணைந்து பயணப்பட்டார்;

ஆற்றல்மிகு தளகர்த்தராகச் செயல்பட்ட கணேசமூர்த்தியின் இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது;


கணேசமூர்த்தியின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், மதிமுக தொண்டர்களுக்கும், திராவிட இயக்கப் பற்றாளர்களுக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”


தமிழக முதலமைச்சர்
- முக ஸ்டாலின் 



சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.

Comments

Popular posts from this blog

புதிய படத்தில் கதாநாயகனாக அருண் கார்த்திக்...

பிரச்சாரத்தை துவங்கிய பேராசிரியர்....மதுரை மக்கள் யார்பக்கம்?

கணவன்,மனைவி,மகன் விஷம் குடித்து தற்கொலை