பழநி முருகன் கோவிலில் திடீர்தீவிபத்து...
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இலவச சுற்றுலா வாகனம் இருக்கும் இடத்தில் கோவில் நிர்வாகத்தால் கொட்டப்படும் குப்பைகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அருகில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் பக்தர்கள் புகை மண்டலமாக காட்சி அளிப்பதால் மூச்சு விட கூட முடியவில்லை என பொதுமக்கள் புகார்.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான சுற்றுலா பஸ் நிலையம் உள்ளது. தினந்தோறும் ஏராளமான வாகனங்களை பக்தர்கள் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதன் அருகே உள்ள பக்தர்கள் போடப்படும் குப்பைகளை சேகரித்து சுற்றுலா வாகன நிறுத்துமிடம் அருகே குப்பை கொட்டபடுகிறது. இன்று குப்பையில் இருந்து திடீரென பிடித்த தீயால் எழுந்த புகைமண்டலமாக அடிவாரத்தை சூழ்ந்தது. சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், அடிவாரம் பகுதி மக்கள் மூச்சுத் திணறலால் அவதிப்பட்டனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தும் தீயை அணைக்க வரவில்லை என்றும், ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் கோவில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
<script async src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5442533208940038"
crossorigin="anonymous"></script>
சினிமா, அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆன்மீக செய்திகளுக்கு southindiaanews பக்கத்துடன் இணைப்பில் இருங்கள்.
Comments
Post a Comment